சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்த எல்.பி. பிரவீன் டோப்போ என்பவர், பள்ளிக் குழந்தைகளுக்குத் தவறான ஆங்கில எழுத்துப்பிழைகளைக் கற்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் “மூக்கு” (Nose), “காது” (Ear), “கண்” (Eye) போன்ற எளிய ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான எழுத்துப்பிழைகள் தெரியாமல், அவற்றை மாணவர்களுக்குத் தவறாகச் சொல்லிக் கொடுத்துள்ளார். மேலும், கரும்பலகையில் கூட நாட்கள் மற்றும் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை போன்ற உறவுமுறைகளுக்கான ஆங்கில வார்த்தைகளைத் தவறாக எழுதியுள்ளார்.
A government school teacher in Chhattisgarh’s Balrampur distt was suspended after a video showed him teaching incorrect English spellings like “Sanday,” “Wensday,” and “Noge.”#Chhattisgarh #Balrampur #WrongEnglishSpelling #EnglishTeacher #viralvideo pic.twitter.com/jWwPs13yha
— Webdunia English (@WDEng_Portal) November 18, 2025
“>
இதுகுறித்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்ட நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி எம்.ஆர். யாதவ் உடனடியாக ஆசிரியர் பிரவீன் டோப்போவை இடைநீக்கம் செய்தார்.
छत्तीसगढ़ के बलरामपुर से आई ये तस्वीरें प्रदेश की शिक्षा व्यवस्था पर बड़ा सवाल खड़ा करती हैं. वाड्रफनगर विकासखंड के कोगवार गांव के प्राथमिक स्कूल में मास्टरजी बच्चों को अंग्रेज़ी पढ़ा तो रहे हैं, लेकिन खुद ही स्पेलिंग नहीं जानते. वीडियो वायरल होने के बाद शिक्षक को निलंबित कर दिया… pic.twitter.com/MEPpFgJP0y
— Vistaar News (@VistaarNews) November 17, 2025
“>
இந்தக் க பள்ளிக்கு மேலும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
