பெங்களூருவில் வசிக்கும் இத்தாலியப் பெண் ஒருவர், தான் இந்தியாவில் அனுபவிக்கும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை எடுத்துரைக்கும் வகையில், ஒரு சிறு காணொளியைப் பகிர்ந்து சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். செரினா என்ற அந்தப் பெண், ஒரு கடைக்குள் தான் ஷாப்பிங் செய்தபோது தனது ஹெல்மெட்டை தவறுதலாக ஸ்கூட்டரிலேயே விட்டுச் சென்றதைக் கண்டபோது ஆச்சரியமடைந்தார்.
View this post on Instagram
தான் கடைக்கு வெளியே சென்றபோது, ஹெல்மெட் அப்படியே இருந்ததைக் கண்ட அவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தக் காணொளியில் அவர், “ஐயோ! இத்தாலி என்றால் இது இரண்டு நிமிடங்கள் கூடத் தாக்குப்பிடித்திருக்காது” என்று குறிப்பிட்டு, இந்தியாவில் தனது உடைமைகளுக்குக் முழுப் பாதுகாப்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் தனது பதிவில், “இந்தியாவில் வாழ்வதன் பலன் இதுதான். எனது பொருட்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன், அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பல பயனர்கள் அவரது கருத்தை ஆதரித்து, “உண்மைதான், இத்தாலியில் எனது இரண்டு பைக்குகள் திருடு போய்விட்டன”, “இதைத்தான் நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்” என்று ஆமோதித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
