சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s Singapore) கடையில் நடந்த ஒரு உணவுக் குழப்பம் காரணமாக, இந்தியப் பெண் ஒருவர் கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் வசித்து வரும் அந்த இந்தியப் பெண், தான் ஒரு சைவ உணவு உண்பவர் (Vegetarian) என்று ஊழியர்களிடம் தெளிவாகக் கூறியும், அவருக்குத் தவறுதலாக அசைவ உணவைக் (Non-Vegetarian) கொடுத்துள்ளனர்.
இது தெரியவந்தபோது, உணர்ச்சிவசப்பட்ட அந்தப் பெண், “நான் இந்தியாவைச் சேர்ந்தவள், நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன், நீங்கள் எப்படி இப்படிச் செய்யலாம்?” என்று கூறி அழுதார்.
View this post on Instagram
தனக்குப் பிடிக்காத அசைவ உணவைச் சாப்பிட்டதால், ஏற்பட்ட கோபம் மற்றும் துக்கம் காரணமாக அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுததை வீடியோவில் காண முடிகிறது.
இந்த வீடியோ, சைவ உணவு உண்பவர்கள் வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் உணவுத் தவறுகளின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
உடனடியாகத் தவறை உணர்ந்த மெக்டொனால்ட்ஸ் ஊழியர்கள், அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் ஊழியர்களின் பொறுப்பின்மைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், வெளிநாட்டுக் கடைகளில் உணவுகளைக் கையாளும்போது அதிக கவனம் தேவை என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
