பாம்புகளில், குறிப்பாக நாகப்பாம்பின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கும். உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நாகப்பாம்பை, ஒரு நபர் துணிச்சலாகப் பிடித்து முத்தமிடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, பாம்பைக் கண்டால் பயப்படுவது இயல்பு.
भाई का यमराज जी के साथ उठना बैठना है…।😂 pic.twitter.com/PxyGra8hh3
— Shagufta khan (@Digital_khan01) November 11, 2025
ஆனால், அந்தக் காணொளியில் ஒரு நபர் எளிதாக ஒரு நாகப்பாம்பைப் பிடித்து, அது ஒரு பொம்மை போல இருப்பதாகக் காட்டுகிறார். அவரது முகத்தில் பயமோ பதட்டமோ இல்லை. இந்த வீடியோவின் மிகவும் அதிர்ச்சியான காட்சி என்னவென்றால், அந்த நபர் அந்த விஷப் பாம்பை முத்தமிடுவது தான். நாகப்பாம்பின் தலையைத் தன் வாயருகே கொண்டு வந்து அதன் உதடுகளில் முத்தமிடுகிறார். இத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் செயலை யாரும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அவர் பாம்பை மீட்கவே வந்திருந்ததாகவும், பொதுவாக மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்புக் கருவிகள் மற்றும் நீளமான கம்பிகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த நபர் எந்தவிதப் பாதுகாப்புமின்றி, வெறுங்கையால் நாகப்பாம்பைப் பிடித்து, அதன் படமெடுத்த நிலையிலும் அதை அன்புடன் தொட்டு முத்தமிடுவது, அங்கிருந்தவர்களுக்கு ஒரு திரைப்படக் காட்சியைப் பார்ப்பது போல இருந்துள்ளது.
பின்னர், அவர் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து ஒரு பைக்குள் போட்டு, பாதுகாப்பான இடத்தில் விடச் சென்றுள்ளார். பாம்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இத்தகைய பொறுப்பற்ற செயல்கள், அனுபவம் இல்லாத மற்றவர்களிடையே தவறான செய்தியைப் பரப்பி, விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதை யாரும் பின்பற்றக் கூடாது.
