ஒரு பெண் மயிரிழையில் உயிர் தப்பிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கடையில் இருந்து தனது ஸ்கூட்டரை வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரெனக் கடையின் பெரிய இரும்பு ஷட்டர் (Shutter) மேலிருந்து வேகமாகக் கீழே விழுந்ததில் அந்தப் பெண் அதிர்ச்சியில் திகைத்தார். ஷட்டர் கீழே இறங்கும்போது, அந்தப் பெண்ணும் அவரது ஸ்கூட்டரும் ஷட்டருக்குள் சிக்கிக் கொள்வதை சிசிடிவி காணொளி தெளிவாகக் காட்டுகிறது.

அந்தப் பெண் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்திருந்ததால், தலையில் காயம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. ஷட்டரின் அதிக எடையும் வேகமும் அவர் தப்பிப்பதை முதலில் கடினமாக்கியது.

சில நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், அந்தப் பெண் தைரியம், மன உறுதியுடன் உடனடியாகக் கடைக்குள் வேகமாக ஓடினார். அவர் உள்ளே நுழைந்த சில கணங்களில், ஷட்டர் முழுவதுமாகக் கீழே விழுந்து, அவருடைய ஸ்கூட்டர் சிக்கிக் கொண்டது. அவர் இன்னும் சில வினாடிகள் தாமதித்திருந்தால், ஒரு பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

“>

 

இந்தப் பெண் சிறிய காயங்களுடன் தப்பினாலும், தலைக்கவசம் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தடுத்தது. இந்தக் காணொளியைப் பார்த்த பலர், தலைக்கவசம் இல்லாமல் இருந்திருந்தால் விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் எனக் கருத்து பதிவிட்டுள்ளனர்.

எவ்வளவு குறுகிய தூரமாக இருந்தாலும், எப்போதும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற முக்கியப் பாடத்தை இந்த வீடியோ அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.