சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் வைரலாகும் வீடியோக்கள், செய்திகள், நிகழ்வுகள் நொடிகளில் நம்முன் வந்து நிற்கின்றன. இவற்றில் பல அற்புதமாகவும், ஆச்சரியப்படுத்துவதாகவும் இருக்கும். அவ்வகையில் ராஜஸ்தான் ஜெய்பூரைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் திறமை வைரல் ஆகி வருகிறது. அவரது திறமை ஓட்டுதலில் இல்லை, பிரெஞ்சு மொழியில். சரளமாக பிரெஞ்சு பேசும் இந்த ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ இப்போது இணையத்தில் பரபரப்பாக பரவுகிறது.
பிரெஞ்சு சுற்றுலாப்பயணி பெனாயிட் ஜெய்பூருக்கு வந்தபோது, ஆட்டோவில் பயணிக்கும்போது இவரது பிரெஞ்சு பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். “சுற்றுலாப்பயணிகளுடன் பிரெஞ்சில் பேசுவேன்” என்று இவர் பிரெஞ்சில் சொன்னதும், “நீதான் என்னைவிட சிறப்பாகப் பேசுகிறாய்” என்று பெனாயிட் பாராட்டினார். சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்லும்போது பிரெஞ்சு கற்றுக்கொண்டதாக இவர் கூறினார். இந்த வீடியோவை பெனாயிட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார், இப்போது வைரலாகி வருகிறது.
