ஒரு நாளில் அடிக்கடி கொட்டாவி விடுவது பலருக்கும் பழக்கமாக இருக்கும். ஆனால், அளவுக்கு மீறி கொட்டாவி விடுவது சில சமயங்களில் பிரச்சினையை உண்டாக்கலாம். பாலக்காடு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், கன்னியாகுமாரி-திப்ருகார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் அதிகமாக கொட்டாவி விட்டதால், வாயை மூட முடியாமல் தவித்தார். இதற்குக் காரணம், டி.எம்.ஜே (டெம்போரோமாண்டிபுலர் ஜாயின்ட்) டிஸ்லொகேஷன் எனப்படும் தாடையெலும்பு இடம்பெயர்ந்த நிலை.

இதனால், வாய் திறந்த நிலையில் பூட்டப்பட்டு, மூடுவதற்கு முடியாமல் போனது. உடனடியாக ரயில்வே மருத்துவ அதிகாரி பி.எஸ். ஜிதன், பாலக்காடு ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு விரைந்து பயணிக்கு முதலுதவி அளித்தார். பின்னர், அந்தப் பயணி அதே ரயிலில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். டி.எம்.ஜே டிஸ்லொகேஷன் என்பது தாடையெலும்பின் ‘பால்-ஆண்ட்-சாக்கெட்’ மூட்டு தனது இயல்பான இடத்திலிருந்து நழுவுவதால் ஏற்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Manorama News (@manoramanews)

இது அதிகமாக கொட்டாவி விடும்போது, விபத்துகளின்போது அல்லது சில மருத்துவ நிலைகளில் நிகழலாம். இந்த நிலையில், வாய் திறந்தபடி பூட்டப்பட்டு, வலி, பேசுவதற்கு சிரமம், வாயை மூட முடியாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பொதுவாக, மருத்துவர் கையால் இந்த மூட்டை மீண்டும் சரியான இடத்தில் பொருத்திவிட முடியும். ஆனால், மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.