இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் சாலையைக் கடக்க முயன்றபோது, ஏற்கனவே ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் மற்றொரு பேருந்து வந்தது. இதனால் இரு பேருந்துகளுக்கும் நடுவே அந்த இளைஞர் சிக்கிக் கொண்டார்.
இரு பேருந்துகளும் அவரை இடித்து நசுக்கியதால், இளைஞர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் அவராகவே எழுந்து சென்று விட்டார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இவரை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்ததோடு பேருந்து ஓட்டுனரையும் கடுமையாக திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
