இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியில் உள்ள நம்பியாற்றில் திடீரென வெள்ளம் வரத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு வாலிபர் தனது செருப்பை எடுப்பதற்காக ஆற்றுப் பகுதிக்குச் சென்றார். இது செருப்புக்காக உயிரைப் பணயம் வைத்தது போல் தோன்றியது.

வாலிபர் செருப்பை எடுத்துவிட்டு நகர்ந்த சில நொடிகளிலேயே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. முதலில் குறைந்த அளவில் வந்த வெள்ளம், பின்னர் அதிகரிக்க தொடங்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.