இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவின் முக்கியமான வீராங்கனையான டாஜ்மின் பிரிட்ஸ், தனது விளையாட்டு திறமையாலும், புது முறையிலான கொண்டாட்டத்தாலும் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், தனது சதத்தை பூர்த்தி செய்த உடனே, தசரா பண்டிகை முடிந்து தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இந்திய மரபினை பிரதிபலிக்கும் வகையில், ஸ்ரீராமரின் பாணியில் வில்லும் அம்பும் எய்து காட்டும் ‘போஸ்’ மூலம் கொண்டாட்டம் செய்தார். இந்த செயல், திருவிழா சூழ்நிலையில் இருந்த பார்வையாளர்களிடையே பரபரப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

“>

 

விருதுகள் மட்டுமின்றி, தனது சிறந்த  பேட்டிங் மூலமாக கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்கள் அடித்துள்ள டாஜ்மின், 2025 ஆண்டுக்குள் மட்டும் ஐந்து சதங்களை பதிவு செய்து, ஒரே ஆண்டில் அதிக சதங்களை பெற்ற வீராங்கனையாக புதிய சாதனை படைத்துள்ளார்.

அவரது இந்த சாதனை, மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் முக்கியமாக பேசப்படும் அளவிற்கு உள்ளது. தனித்துவமான கொண்டாட்டமும், வரலாற்று சாதனையும் இணைந்த இந்த நிகழ்வு, இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றதுடன், சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.