சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு விருது வழங்கப்பட்டது. மேடைக்கு சென்று விருதை வாங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அந்த விருதை கீழே வந்ததும் தன் காலுக்கு அடியில் வைத்துவிட்டு உட்கார்ந்தார்.
இதனை கவனித்த ரோகித் சர்மாவின் மனைவி உடனடியாக அவரது காதில் ஏதோ சொன்னார். அதாவது தன்னுடைய கணவர் ரோகித் சர்மாவின் காதில் விருது கீழே இருப்பது பற்றி அவர் கூறியதாக கூறப்படுகிறது. உடனடியாக ரோகித் சர்மா அந்த விருதை எடுத்து மேஜையில் வைத்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரோகித் சர்மாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
रोहित शर्मा बड़े खिलाड़ी हैं। कोई बड़ा खिलाड़ी सिर्फ अपनी स्किल से नहीं बनता, बल्कि अपने गुणों और संस्कारों से भी बनता है।#RohitSharma pic.twitter.com/f51t03dueo
— Ved Prakash Tugnayat (@VTugnayat) October 13, 2025
