லாகூரில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்று வருகிறது. முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றும், ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் 23 ரன்களில் வெளியேறினார்.
பாபர் அசாம் ஒரு ரனில் இருந்தபோது, தென்னாப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வீசிய பந்தில் எதிரணி வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்தனர். அம்பையர் அவுட் என்று அறிவித்ததும், பாபர் ரிவ்யூ கேட்டார். UltraEdge மூலம் அவர் நாட் அவுட் என உறுதி செய்யப்பட்டது.
No respect for Babar Azam in Pakistan
When Babar Azam reviewed, Ramiz Raja said, “Ye out hoga, drama karega.”pic.twitter.com/HLKJnyV1he
— Shah (@Shahhoon1) October 12, 2025
“>
இந்த சூழ்நிலையைப் பின்னணியாக கொண்டு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் தற்போதைய கமெண்டேட்டருமான ரமீஸ் ராஜா, தன்னுடைய மைக் ஆஃப் நிலையில் இருப்பதாக எண்ணி, “இது கண்டிப்பா அவுட் தான்… இவன் இப்போ டிராமா ஆரம்பிக்கப்போறான், ரிவ்யூ கேப்பான்” என விவாதத்திற்குரிய கருத்தை வெளியிட்டார்.
இந்த உரை பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள், பாபர் அசாம் மீது அவமதிக்கும் வகையில் பேசிய ரமீஸ் ராஜாவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஒரு முன்னாள் வீரராகவும், தற்போதைய கமெண்டேட்டராகவும், பொறுப்பான உரைநடை கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
