UK-யில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண், ஒருவரது கார் கண்ணாடியை அனுமதியின்றி சுத்தம் செய்துவிட்டு, அதற்கு 20 பவுண்ட் (இந்திய மதிப்பில் 2389 ரூபாய்) கேட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கார் உரிமையாளர், “எதற்காக 20 பவுண்ட்?” என்று கேட்க, அந்தப் பெண், “கார் கண்ணாடியை சுத்தம் செய்ததற்கு இதுதான் கட்டணம், இது வாழ்க்கைச் செலவுக்கு தேவை” என்று பதிலளித்தார். ஆனால், கார் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்தார். இருந்தும் தொடர்ந்து “20 பவுண்ட், 20 பவுண்ட்” என்று மீண்டும் மீண்டும் அந்த பெண் கேட்டுக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்வு காணொளியாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இந்த செயலை விமர்சித்து, இது தவறான நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தனர்.
கார் உரிமையாளர் இந்த செயலை “வழிப்பறி” போன்று இருப்பதாகக் கூறியபோது, அந்தப் பெண் கோபமடைந்து, மீண்டும் “20 பவுண்ட்” கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் கார் உரிமையாளரை அங்கிருந்து நகரவிடாமல் தடுத்து, தொடர்ந்து வாதிட்டார். இந்தக் காணொளி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் இந்தியர்கள் உட்பட பலர் இந்தப் பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற செயல்கள், அனுமதியின்றி சேவை செய்து பணம் கேட்பது தவறு என்பதை உணர்த்துகிறது.
