அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் நல்ல வேலைகளில் இருந்து, சமூகத்தில் பங்களிக்கின்றனர். ஆனாலும், சிலர் அவர்களை நடத்தும் விதம் காணொளியாக வெளியாகி, இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு அமெரிக்கர் இந்தியரைப் பார்த்து கடுமையாகப் பேசுகிறார். “என் நாட்டில் நீ ஏன் இருக்கிறாய்? நீங்க நிறைய பேர் இங்கே இருக்கீங்க, அது எனக்கு பிடிக்கல. எல்லா இடத்துலயும் நீங்க இருக்கிறது ஏத்துக்க முடியல. நீங்க திரும்பி இந்தியாவுக்கே போகணும்” என்று சொல்லி, அவமானப்படுத்துகிறார். இந்த வீடியோ இப்போது வைரலாகி, சமூக வலைதளங்களில் இந்தியர்கள் அதைப் பற்றி விவாதித்து, வருகின்றனர். இது அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு எதிரான இனவாத உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

இந்தச் சம்பவம், அமெரிக்காவில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நினைவூட்டுகிறது. பலர் விசா, வேலை, குடியுரிமைக்காக போராடினாலும், சிலர் இப்படி இனவெறியுடன் நடந்துகொள்கிறார்கள். இந்தியர்கள் இதைப் பார்த்து, தங்களது பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பற்றி சிந்திக்கின்றனர். சமூகத்தில் இனவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற காணொளிகள், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை போன்றது. ஆனால், இந்தியர்களின் பங்களிப்பு அங்கு அழியாது என்பதை மறக்கக் கூடாது.