கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதுபோன்ற கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க, இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு கூட்டமாக நின்றிருக்கும் சிலர், பின்னால் இருந்து ஒருவர் தள்ளும்போது நிலைகுலைந்து விழுவது காட்டப்படுகிறது. இதனால், கூட்டத்தில் நிக்கும் போது எப்படி நிற்பது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்ததாக, காணொளியில் எப்படி சரியாக நிற்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. கால்களை சற்று அகலமாக வைத்து, உடலை சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறி, அவர்களை ஒரு குறிப்பிட்ட பொசிஷனில் நிற்க வைக்கிறார்கள். பின்னர், மீண்டும் தள்ளும்போது அனைவரும் சமநிலையுடன் நின்று விடுகிறார்கள். இந்த முறை, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டாலும் விழாமல் பாதுகாப்பாக இருக்க உதவும்.
இதுபோன்ற காணொளிகள், அடுத்த பிரச்சார கூட்டங்களுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனைப் பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் பாதுகாப்பாக நிற்பது பற்றி மக்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
