ரயிலில் பயணம் செய்யும் போது, படிக்கட்டில் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்துவது பொதுவானது. ஆனால், சில திருடர்கள்  தண்டவாளத்தின் அருகில் நின்று, அந்தப் பயணிகளின் போன்களைப் பறிக்க முயற்சி செய்வது வாடிக்கையாக உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் இன்ஸ்டாகிராமில் காணொளியாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் படிக்கட்டில் அமர்ந்து போனில் ஈடுபட்டிருக்கிறார். தூரத்தில் இருந்து மற்றொரு நபர் வேகமாக வந்து, அவரது போனைப் பறிக்க முயன்றார். ஆனால், படிக்கட்டில் அமர்ந்த நபர், அந்த நபர் வருவதிலிருந்து போன் பறிக்க முயற்சிப்பது வரை, முழுவதையும் காணொளியாகப் பதிவு செய்து விட்டார். அவரது முகம் தெளிவாகக் காட்டப்பட்டது சம்பவத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியது.

இந்தக் காணொளி வைரலானதும், நெட்டிசன்கள் அந்தப் திருடனை கண்டித்து, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இது, ரயில்களில் பாதுகாப்பின்மை குறித்து பலரை எச்சரிக்கையாக்கியுள்ளது. போன் பறிப்பு போன்ற குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க, ரயில்வே நிர்வாகம் கூடுதல் கண்காணிப்பு அமைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம், பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பாக அமைந்துள்ளது.