சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒரு நாய் தண்ணீரில் விழுந்து தத்தளித்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த நாயைக் காப்பாற்ற, மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தண்ணீருக்குள் இறங்கி, பத்திரமாக அதை மீட்டு மேலே கொண்டு வருகிறார்.

மேலே வந்ததும், நாயின் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ள, நாயோ தன்னைக் காப்பாற்றிய நபரை உற்றுப் பார்க்கிறது. பின்னர், அந்த நபரின் காலைப் பிடித்து, நன்றி தெரிவிப்பது போல அவரருகே படுத்துக் கொள்கிறது. இந்த உருக்கமான காணொளியைப் பார்த்த இணையவாசிகள், நாயின் நன்றி உணர்வைப் பாராட்டி, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.