சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த காணொளியில், ஒரு நபர் சைக்கிளில் சென்றபடியே வீடு வீடாக பேப்பர் போடுகிறார். வழக்கமாக பேப்பர் போடுபவர்கள் சைக்கிளில் வேகமாக வந்து வீசி செல்வது பொதுவான நடைமுறை. ஆனால், இந்த நபர் சைக்கிளில் செல்லும்போதே பேப்பரை வீசுகிறார், அது நேராக வீட்டிற்குள் சென்று விடுகிறது.
எந்த கோணத்தில் வீசினாலும், பேப்பர் துல்லியமாக வீட்டின் உள்ளேயோ அல்லது வீடு பூட்டியிருந்தால் வெளியில் உள்ள சோபாவிலோ சரியாக விழுகிறது. இந்த அசாத்திய திறமை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் இந்த நபரை “நிஞ்சா கலை கற்றவர்” என்று வேடிக்கையாக குறிப்பிட்டு, அவரது திறமையை பாராட்டியுள்ளனர். மற்றவர்கள் இந்த துல்லியமான செயல்பாட்டை வியந்து, அவரது திறனை கொண்டாடி கருத்து தெரிவித்துள்ளனர். இந்த காணொளி, சாதாரணமான ஒரு வேலையை கூட அசாதாரண திறமையுடன் செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளது.
