சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், சில குழந்தைகள் ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து, வேகமாக ஓடி வீட்டுக்குள் செல்கின்றனர். அப்போது, வீட்டின் வராண்டாவில் ஒரு சிறுவன் காலை நீட்டி அமர்ந்திருக்கிறான். குழந்தைகளைத் துரத்தி வருவது ஒரு நாய் என்று முதலில் நினைத்தாலும், உண்மையில் அது ஒரு நரியாக இருக்கிறது.
குழந்தைகள் வீட்டுக்குள் பாதுகாப்பாகச் சென்றுவிட, அந்த நரி வராண்டாவில் அமர்ந்திருந்த சிறுவனின் காலைக் கடித்து இழுக்க முயற்சிக்கிறது. தக்க சமயத்தில் வீட்டில் இருந்த ஒருவர் நரியின் தலையில் அடிக்கவே, அது சிறுவனை விட்டுவிட்டு ஓடி மறைகிறது. இந்த பதறவைக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பலரையும் பேச வைத்துள்ளது.
