அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு கல்லூரி மாணவியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. “Get Ready With Me” எனும் தலைப்பில், பள்ளி கழிவறையில் மேக்கப் போட்டு, உடை மாற்றிக்கொண்டு, முதல் பீரியட் வகுப்பை தவிர்த்து கொண்டு இருந்த அந்த மாணவி, இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஆனால் இந்த வீடியோ நேரடியாக பள்ளியின் அதிபர் நீகா ரிச்சர்ட்ஸ் அவர்களின் பார்வையில் விழுந்தது. அதிபர் நீகா ரிச்சர்ட்ஸ் தனது சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நேரடியாக அந்த மாணவியின் பெயரை குறிப்பிடும் வகையில், “ஹாய் அமரா, நான் இந்த வீடியோவை உன் பெற்றோர்களிடம் இன்னும் காட்ட வில்லை.
ஆனால் உன் பிரின்சிபாலும் சோஷியல் மீடியாவில் இருப்பதை யாருமே நினைக்கல போல. தினமும் 30 நிமிஷமா வகுப்பை தவிர்க்கும் ‘டிரான்ஸ்ஃபார்மர்’ பயிற்சி இது தான் போல!” என பொதுவெளியில் கண்டித்தார். இதேசமயம், அந்த மாணவியுடன், அவர் தவிர்த்த ஆசிரியரையும் அடுத்த நாளே தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கை சமூக வலைதளங்களில் இருவிதமான பார்வைகளை உருவாக்கியுள்ளது. சிலர் இந்த நடவடிக்கையை கண்காணிப்பு மற்றும் பொறுப்புடன் மாணவர்களைப் பராமரிக்கும் நவீன அணுகுமுறை என பாராட்டினர்.
ஆனால் மற்றவர்கள், “ஒரு சிறுமியை பொது வெளியில் அசிங்கப்படுத்துவது தொழில்முறை ஒழுக்கத்தை மீறுகிறது” எனக் குற்றம்சாட்டினர். ஒரு பயனர், “மாணவியிடம் நேரடியாக பேசியிருக்கலாமே, சோஷியல் மீடியாவில் ஏன்?” என கேள்வியெழுப்ப, மற்றொருவர், “நீங்கள் செய்வது மாணவர்களின் எதிர்காலத்திற்காக, நன்றி” என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
