ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்தில் ஒரு கார்பார்கிங் பகுதியில் நடந்த கோரமான கரடி தாக்குதல், சிசிடிவி காட்சிகளால் தற்போது இணையத்தை உலுக்கி வருகிறது. ரியாபிகோவ்ஸ்கயா தெருவில், ஒரு ஆணை கடுமையாக துரத்தி தாக்க முயன்ற கரடியிடம் இருந்து அவர் முடிவில் காருக்குள் தஞ்சம் புகுந்து அதிசயமாக உயிர்தப்பியுள்ளார். ஆனால், அதே கரடி பின்னர் ஒரு பெண்ணை தாக்கியதில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சி தரும் வீடியோவில், திடீரென காருக்குப் பின்புறத்தில் இருந்து பெரும் வேகத்தில் கரடி பாய்ந்து வருவது, அந்த நபர் வேகமாக காருக்குள் பாய்ந்து கதவை பூட்டுவது தெளிவாக தெரிகிறது. கரடி காரை துரத்தியதில் கண்ணாடிகள் உடைந்தும், பின்புற பம்பர் சிதைந்தும் இருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இவன் அரை விநாடி தாமதித்திருந்தா, கரடி உணவாகியிருப்பான்!” என கூறி அதிர்ச்சியைக் பகிர்ந்துள்ளனர்.
View this post on Instagram
சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே கரடி அருகில் சென்ற பெண்ணை கடுமையாக தாக்கியது. அந்தப் பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் மற்றும் கை முறிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். சம்பவத்துக்குப் பிறகு, காடுகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தக் கரடியை விலக்கிக் கொன்றனர். இந்த சிசிடிவி வீடியோவை @criminal_khv என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டதுடன், சில மணி நேரங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
