இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு அதிசயமான வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் காமெடி கொண்டாட்டத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அமர்ந்துள்ள ஒருவர், தன் கைப்பையை பைக்குடன் இழுத்துச் செல்லும் அதிசய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

அதிசயமாக, அந்த கைப்பை உயரமான வேகத்தில் சென்றபோதும் நிமிர்ந்த நிலையிலேயே இருந்து பாதையில் நசுங்காமல் தொடர்ந்து சென்றது. இந்த வீடியோவை X தளத்தில் @FrontalForce என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அவர் “Highways so good u can move ur luggage bags on them” என்று எழுதி, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியிருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த வீடியோ Samsonite பை விளம்பரமா?”, “நடப்பதெல்லாம் யாருக்காக?” என கருத்துகளை பதிவிட்டு, சம்பவத்தை மீம்களாக மாற்றியுள்ளனர். சிலர் அரசின் நெடுஞ்சாலை மேம்பாட்டை புகழ்ந்தாலும், மற்றவர்கள் இதுபோன்ற அபாயகரமான செயல்கள் உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கை கூறியுள்ளனர்.

ஒரு பயனர், “இது வெறும் காமெடி இல்லை, இது ஒரு கிரைம். பாதையைப் பயன்படுத்தும் பிற பயணிகளின் பாதுகாப்பையும் இதுபோன்ற முடிவில்லாத செயல்கள் பாதிக்கக்கூடும்,” என பதிவு செய்துள்ளார். மேலும், ஒருவர் “என் நண்பன் இதை பண்ணினான்… வெப்பம் மற்றும் இறுக்கம் காரணமாக சூட்கேஸ்-இன் சக்கரங்கள் உருகி விழுந்தன” என பகிர்ந்துள்ளார்.

இது போன்ற வீடியோக்கள் ஒரு பக்கம் நம் நெடுஞ்சாலை வளர்ச்சியை வெளிக்கொணர்ந்தாலும், இன்னொரு பக்கம் பைத்தியக்கார செயலில் சிக்கி உயிரிழக்கக்கூடிய அபாயத்தை நினைவூட்டுகிறது.