சிங்கங்கள் காட்டின் ராஜாக்கள் என்றாலும், பெண் சிங்கங்களே அதற்கான உண்மையான வேட்டையாடுபவர்கள். ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிய ஒரு வீடியோ, ஒரு தாய் எருமையின் துணிச்சலையும், அதன் கூட்டத்தின் ஒற்றுமையையும் உலகறிய செய்துள்ளது. இரைக்கும் மற்றும் வேட்டையாடுபவருக்கிடையேயான இக்காட்சி, விலங்குகள் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடியோவில், பல பெண் சிங்கங்கள் சேர்ந்து ஒரு எருமைக் கன்றை வேட்டையாட முயற்சிக்கின்றன. அந்தக் கன்றை காப்பாற்ற, அதன் தாய் பலத்துடன் எதிர்த்து நின்று ஒவ்வொரு சிங்கத்தையும் தனியாக எதிர்கொள்கின்றது. சில நேரங்களில் ஒரு பெண் சிங்கம் முன்னால் இருந்து தாக்க, மறுபக்கம் மற்றொரு பெண் சிங்கம் வேட்டையில் ஈடுபட முயற்சிக்கின்றது. இந்நிலையில், தாய் எருமை நிலையை சரிவர சமாளித்து, அதற்கு வேட்டையாட வாய்ப்பு தராமல் தன் குட்டியை காப்பாற்றுகிறது.

 

தாயின் இந்த தைரியத்திற்கு பின்னர், மற்ற எருமைகளும் குழுவாக காட்சிக்குள் நுழைகின்றன. ஒற்றுமையாக எதிர்கொள்ளும் இந்த கூட்டத்தை பார்த்ததும், சிங்கங்கள் வேட்டையை விட்டு பின்வாங்கும் சூழ்நிலை உருவாகிறது. இந்த வீடியோவை @Predatorvids என்ற X  கணக்கு பகிர்ந்துள்ளது. மேலும்  “ஒரு தாயின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது! நண்பர்கள் அவளுக்கு உதவினார்கள்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட இந்த 49 வினாடி வீடியோ, 97,000 முறைக்கு மேல் பார்வையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான பின்தொடர்பவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.