இந்தியாவில் கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லாமல், ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஒரு வித்தியாசமான ஈ-ரிக்ஷா வடிவமைப்பை கையாண்ட ஒருவர், தனது கற்பனை திறனால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். வீடியோவில் அந்த நபர், தனது ரிக்ஷாவை சுத்தம் செய்து கொண்டிருக்க, மக்கள் கவனத்தை ஈர்த்தது அந்த ரிக்ஷாவின் தனிப்பட்ட அமைப்புதான்.

 

பொதுவாக நாம் பார்க்கும் ஈ-ரிக்ஷாக்கள் குறைந்த அளவில் உடல் கட்டமைப்பும், ஒரே மாதிரியான வடிவமைப்பும் தான் இருக்கும். ஆனால் இந்த வீடியோவில் வரும் ரிக்ஷா, முன்பகுதியில் மோட்டார் பைக்கைப் போல் வடிவமைக்கப்பட்டு, பின்புறம் பரந்த ரிக்ஷா அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் பைக் மற்றும் மறுபக்கத்தில் பெரிய ஈ-ரிக்ஷா இணைப்புடன் இந்த வாகனம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் ஆச்சரியங்களையும் குவித்து வருகிறது.

இந்த வாகனம் வெறும் தோற்றத்துக்காக அல்ல, இதன் இயந்திர வடிவமைப்பும் வழக்கமான ஈ-ரிக்ஷாக்களில் காணப்படாத தனிச்சிறப்பாகும். அதை  தேய்த்து சுத்தம் செய்யும் உரிமையாளர், இதை வெறும் பயண சாதனம் அல்ல, தனது உழைப்பின் பிள்ளையென பார்த்து பராமரிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த வீடியோவில் வெளிப்படும் கைவினை திறமை, ஆளுமை, உழைப்பு என அனைத்தும் பாராட்டத் தக்கவையாக உள்ளன. “இந்த மாதிரி யோசிக்க ஒருத்தரால் முடிந்திருக்கிறது, நாமும் ஏன் முயற்சிக்கக்கூடாது?” எனும் நம்பிக்கையையும் இந்த வீடியோ பரப்புகிறது.