தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சமீபத்தில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “நான் இந்த மேடையில் கூறுகிறேன், என் கட்சியை சேர்ந்த பலரின் பெயரையும் இதே இடத்தில் நின்று கூறுவேன்.

அதேபோல் , “மை டியர் அங்கிள்” என்று கூறும் விஜய் நமக்கு மாப்பிள்ளை நான் மாப்பிள்ளை பார்த்து கேட்கிறேன். சனிக்கிழமை சனிக்கிழமை தோறும் கூட்டம் போடுகிற நீங்கள் உண்மையாக உங்கள் கட்சியில் உள்ள தொண்டர்கள் 50 பேரின் பெயர்களை தெளிவாக சொல்லிவிட்டால் இதே மேடையில் தூக்கு போட்டு கொள்கிறேன்.

இல்லை என்றால் குதிரை சவுக்கால் அடுத்த கூட்டத்தில் தங்களை அடிப்பேன் என சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார். இதற்கு தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.