தமிழ்நாட்டில் எதிர்வரும் தேர்தலையொட்டி, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.
இந்த கூட்டணியில் இருந்து சமீபத்தில் டிடிவி தினகரனும், ஓ. பன்னீர்செல்வமும் வெளியேறி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தையில் வெளிநீக்கம் செய்யப்பட்டதாக இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரனின் சென்னை இல்லத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு திடீரென சென்றுள்ளார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரகசியமாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், எதிர்கால அரசியல் கூட்டணி தொடர்பான விவரங்கள், பாஜகவுடன் மீண்டும் ஒருங்கிணையும் வாய்ப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய சூழலை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
