தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை உருவாகும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம்  தலைவர் விஜய் நடத்தும் பிரச்சார நிகழ்ச்சிகளில் திரண்ட மக்கள் கூட்டம்  பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரை பார்ப்பதற்காக மக்கள் அலைமோதும் காட்சிகள் பதிவாகி வருகின்றன. இதனால், அவர் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.

“>

 

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 22) திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரப்பூர்வ X  பக்கத்தில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களில் திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் – உறுதியேற்போம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களுக்கு எனது நன்றிகள்!” என்ற பதிவுடன், பொதுமக்கள் வெள்ளம்போல் திரண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி திமுகவின் அரசியல் அடுத்த கட்டத்தை உருவாக்கும் முயற்சியாகவும், எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.