பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்த திமுகவிற்கு நீதிமன்றம் அதிரடி குட்டு வைத்துள்ளது. அமைச்சர் மீதான அந்தக் குற்றச்சாட்டு எந்தவித உண்மையும் இல்லாமல், முறையான தகவல்களைச் சரிபார்க்காமல் பரப்பப்பட்ட தவறான தகவல் என்பது நீதிமன்ற விசாரணையில் அம்பலப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் “Prima facie false information” அதாவது வெளிப்படையான பொய்யான தகவல்கள் என்று மாண்புமிகு நீதிபதியே நேரடியாகப் பதிவு செய்துள்ளார்.
அமைச்சருக்கும் அவரது உறவினர்களுக்கும் இந்த விவகாரத்தில் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் எந்தவொரு நியாயமான ஆதாரமும் திமுக தரப்பால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றம் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
உண்மையை ஆராயாமல் அவதூறுகளைப் பரப்பிய திமுகவின் சமூக வலைதள ஆதரவாளர், நீதிமன்றத்தில் தனது செயலுக்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வந்த திமுகவிற்கு இது நீதிமன்றத்திலிருந்து விழுந்த மிகச் சரியான சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் இனியும் இதுபோன்ற பொய்யான கதைகளையும் புனைகதைகளையும் கூறிக்கொண்டு திமுகவால் தங்களது அரசியல் பிழைப்பை நடத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
“ஆதாரம் எங்கே?” – திமுகவுக்கு நீதிமன்றம் நறுக்கென குட்டு!
பழனி கோயில் நில விவகாரத்தில், அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, சமூகவலைதள ஆதரவாளர்களை வைத்து திட்டமிட்டு ஒரு fake narrative உருவாக்கி பிரச்சாரம் செய்த திமுக, நீதிமன்றத்தில் மூக்குடைபட்டு நின்றுள்ளது.… pic.twitter.com/CtvP4soK2M
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 29, 2026
“>
எவ்விதத் தரவுகளும் இன்றி அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பும் அரசியல் கலாச்சாரத்திற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம் அவதூறு பரப்பியவர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், அரசியல் அரங்கில் திமுகவின் தந்திரமான பிரச்சாரங்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
