அதிகாரி என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை மறந்துவிட்டு, தங்களை தாங்களே உயர்ந்தவர்களாக நினைத்துக்கொண்டு அதிகார மமதையுடன் செயல்படும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். தங்களுக்கு கீழ் உள்ள அலுவலகங்களுக்கு ஆய்வு செய்யச் செல்லும்போது, அங்குள்ள பணியாளர்களிடம் வறுத்த பாதாம் முதல் ஆறு வகையான விருந்துகள் வரை கேட்டு வாங்குவது, அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியை நிற்க வைத்துவிட்டு அவரது நாற்காலியில் தாங்கள் அமர்வது போன்ற பல அதிகார அத்துமீறல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தங்களது சொந்தப் பணியை மறந்துவிட்டுத் தங்களை ஒரு மன்னாதி மன்னராக நினைத்துச் செயல்படும் இதுபோன்ற அதிகார வர்க்கத்தினரிடையே, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது எளிய செயலால் ஒட்டுமொத்த அரசியல் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

சமீபத்தில் காவல் நிலையம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், வழக்கமான அரசியல் மற்றும் அதிகார விகாரங்களை முற்றிலும் உடைத்தெறிந்தார். காவல் நிலையத்தின் அன்றாடப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை அவரது சொந்த நாற்காலியிலேயே அமரச் சொன்ன அவர், தானோ அவருக்கு நேராக இருந்த மற்றொரு சாதாரண நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

இதன் மூலம் அரசுப் பணியில் உள்ள ஒவ்வொரு காவல் அதிகாரிகளுக்கும் உரிய மரியாதையையும் கவுரவத்தையும் அவர் நேரடியாக வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும் எளியோரை மதிக்கும் இந்த உயர்ந்த பண்பு மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பதவியின் போதையிலும் அதிகார மமதையிலும் மூழ்கிக்கிடக்கும் மற்றவர்களும் இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“>

 

தலைவர் விஜய்யின் இந்தச் செயல், உண்மையான தலைமைப் பண்பு என்பது அதிகாரத்தைக் காட்டுவதிலல்ல, மற்றவர்களை மதிப்பில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.