உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹல்தோனி கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இந்தக் காட்சிகள் போலீஸாரின் விசாரணையில் முக்கிய தடயமாக அமைந்ததாக கூறப்படுகிறது.சிறுமி தொடர்பான வழக்கில் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை போலீஸார் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Update –
नोएडा, यूपी में रेप के बाद 6 वर्षीय बच्ची की हत्या करने वाला बलराज उर्फ बल्ले पुलिस एनकाउंटर में मारा गया !! https://t.co/0Pj0qm33Tg pic.twitter.com/GCpq9SGajJ
— Sachin Gupta (@Sachingupta) August 29, 2026
அந்த விசாரணையில் சிறுமியை கொலை செய்தது பல்ராஜ் என்பது தெரியவந்தது. இவர் சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி சென்றுள்ளார். குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீஸ் பிடித்த நிலையில் அவர்தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் பரபரப்பு ஏற்பட பின்னர் தற்காப்புக்காக போலீசார் அந்த கொடூரனை சுட்டுப் பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
