பாலிவுட் மற்றும் அசாமிய திரையுலகில் பிரபலமான பாடகர் ஜூபீன் கார்க், சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியின் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஜூபீன் கார்க் ஒரு குரூஸ் கப்பலில் உற்சாகமாக பார்ட்டி செய்து கடலில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் இரண்டாவது முறையாக குதிக்கிறார். இதுவே அவர் கடைசியாக கடலில் இறங்கியது என்றும் கூறப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by • J E E T ⚡️ | CREATOR | EXPLORER 20 (@abhijitprojaa)

மரணத்திற்கு முன், சிங்கப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஜூபீன் கார்க் தனது நண்பர்களுடன் பாடல் பாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ அவரது உயிரிழப்புக்கு சுமார் 18 நிமிடங்களுக்கு முன்னதாக படம் பிடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜூபீன் கார்க் உடலை இன்று டெல்லியில் பெற்றுக்கொண்டு, நாளை காலை 6 மணிக்குள் குவாஹாத்திக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். அவரது உடல் சருசாஜாய் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். இதற்கிடையில், வடகிழக்கு திருவிழா ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக அசாம் போலீசார் வழக்குப் பதிந்து, பாடகரின் மரணத்தில் தொடர்புடையவர்களை விசாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.