நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நேற்று கோவையில் உள்ள ஒரு மாலில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
😭😭😭😭😭😭❤️❤️Love you nah https://t.co/V9jIaIoGCI
— Kutty___ (@Kutty_Mani__) September 20, 2025
“>
நிகழ்ச்சியின் போது நடிகர் தனுஷ் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி மேடையில் ஏறி அவரை கட்டிப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர், ‘ஒரே ஒரு ஃபோட்டோ’ என கோரிக்கை வைத்த அந்த ரசிகருடன் தனுஷ் மனம்திறந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
