தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னர், கோவையில் உள்ள மாலில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் பார்த்திபன் உரையாற்றும் போது, “விஜயம் யார் வேண்டுமானாலும் பெறலாம்… ஆனால் ஜெயம் உங்கள் கையில் தான் உள்ளது. ஆனா 2026ல் நான் தான் சிஎம்” என, நடிகர் விஜயின் அரசியல் பயணத்தைக் குறிக்கும் வகையில், மறைமுகமாக அரசியல் கவிதை வாசித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழக வெற்றிக்கழகத்தை துவங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜயை குறிக்கும் வகையில் பார்த்திபன் பேசிய விதம், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
