தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக தள்ளிப்போன நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் ஜூலை 23ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்ற அடியே என் பூந்தேனே என்ற பாடல் இன்று வெளியாகும் இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
