தசரா விழாவையொட்டி வடமாநிலங்களில் ராம் லீலா நாடகங்களானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் லவ் குஷ் ராம்லீலா நாடகக்குழு மாடல் அழகியான பூனம் பாண்டேவை மண்டோதரி (ராவணனின் மனைவி) கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதற்கு பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பூனம் பாண்டேவுக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.

டெல்லி பாஜகவின் ஊடக பிரிவு தலைவரான பிரவீன் ஷங்கர் கபூர், லவ் குஷ் ராம்லீலா குழுவின் துணைத் தலைவராகவும் இருக்கின்றார். இவர் தன் கடிதத்தின் வாயிலாக பூனம் பாண்டேவை மாற்ற கோரி இருக்கிறார். அதுமட்டுமின்றி பூனம் பாண்டே சோசியல் மீடியாக்களில் சர்ச்சை வகையில் பதிவிடப்படும் போட்டோ மற்றும் வீடியோகளுக்காகவும் அறியப்படுகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை 22 ஆம் தேதி நாடகம் தொடங்கியிருக்கும் நிலையில் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் செய்தி பரவலாகி வருகிறது.