கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் தான் அம்மணியம்மாள். இவர் பணிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பிரபாகரன் என்பவர் அம்மணியம்மாளுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் மோட்டார்சைக்கிளை யாருமில்லாத இடத்தில் நிறுத்தி அம்மணியம்மாள் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சங்கிலி மற்றும் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்‌. இதற்கிடையில் பிரபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 75,000ஐ இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததாக புகார் பெறப்பட்டது.

இதுபற்றிய விசாரணையில் கையாடல் செய்தது உண்மையென தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது‌. இவ்வாறு பறிமுதல் செய்த பணத்தை இன்ஸ்பெக்டர் கையாடல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.