மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் நகரில் இரவு நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றது. ஐடிஐ சிக்னல் பகுதியில், குடிபோதையில் வந்த இரண்டு பேர் தெரு நாய்களை தொந்தரவு செய்ததோடு, ஒரு குட்டி நாயைக் கூட தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ஒரு பெண் பதிவு செய்த வீடியோவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அந்த பெண் அவ்வழியில் தெரு நாய்களுக்கு உணவளிக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by 🇮🇳Heena Patil(Yogita)”मी शेतकरी पुत्री” (@strayanimals_lover)

வீடியோவில் ஒருவர் அமைதியாக ஒரு குட்டி நாய்க்கு அருகே சென்று திடீரென தான் வைத்திருந்த கல்லால் தாக்குகிறார். அதனால் பயந்த குட்டி நாய் வேதனையுடன் கூச்சலிடுகிறது. அதே நேரம், வீடியோ பதிவு செய்த பெண் கூறுகையில், இரவு 1.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அந்த ஆட்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

இந்தச் சம்பவத்தையடுத்து அந்த பெண் உடனடியாக 112-க்கு அழைத்து போலீசுக்கு தகவல் அளித்தார். சத்பூர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். “முதல் முறையாக போலீஸ் எனக்காக நன்றாக பதிலளிச்சாங்க. வழக்கமாக சமூகத்தோட பக்கம் நிக்குறாங்க,” என கூறிய அவர், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார். “ஒருபக்கம் சிவனுக்கு தண்ணி ஊத்துறாங்க, மறுபக்கம் நாய்களை அடிக்குறாங்க… இது வெறும் மூட நம்பிக்கைத்தான்,” என்றார் அவர்.