சமூக வலைதளங்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும், ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு குட்டிக் குழந்தையின் வீடியோ, நெஞ்சை உருக்கும் அளவுக்கு இனிமையும், சிரிப்பை தூண்டும் காட்சிகளும் நிறைந்தது.

 

வீடியோவில், சில சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஒரு மெத்தை மீது அமர்ந்து, கண்ணை மூடி ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் காட்சியை ஒரு ஆசிரியை கேமராவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு சிறுவன் மட்டும் கண்ணை மூடாமல், கவனித்துக் கொண்டிருப்பதை ஆசிரியர் பார்க்கிறார்.

உடனே கையால், “கண்ணை மூடு” என்று சைகை செய்கிறார். ஆனால் குழந்தைக்கு அந்த சைகையின் அர்த்தம் புரியவில்லை. அந்த ஆசிரியை சைகை செய்ததை, அந்த சிறுவன் மீண்டும் அவர் போலவே சைகை செய்யத் தொடங்குகிறார்.

இந்த சின்ன சின்ன நிமிடங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சில நேரம் கழித்து, ஆசிரியையின் சைகையின் உண்மையான பொருளை புரிந்துகொண்ட அந்த குழந்தை, தனது விரலால் கண்ணை மூடுகிறார். இதை பார்த்த அனைவரும் சிரிப்பில் மிதந்தனர். இந்த வீடியோவை @MemeCreaker என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

இதனை பார்த்த பலர், “இது என் பிள்ளை பருவத்தை நினைவூட்டுகிறது”, “இவங்க மாதிரி குழந்தைகள் தான் வாழ்க்கையின் இனிமை” என கூறி புகழ்ந்து வருகின்றனர்.