2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் திருப்புமுனையை உருவாக்கும் நோக்கில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக சேலம் மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக இருந்த ஜி.பி. ராஜா தலைமையில், திமுகவுடன் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைக்கப்பட்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்தி, வாக்காளர் தொடர்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் புதிய  உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார். இந்தச் சேர்க்கை, அதிமுகவில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.