2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கூட்டணிகள் குறித்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் பலமுறை இருவரும் சந்தித்து, இருதரப்பிலும் மரியாதை மற்றும் நெருக்கம் வெளிப்பட்டதைக் கருத்தில் கொண்டு, தற்போதும் ராமதாஸ் – மோடி சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக வட்டாரத்தினர் கூறுவதாவது, “மோடி அவர்களுக்கு ராமதாஸ் மீது மிகுந்த மரியாதை உண்டு. பல்வேறு நேரங்களில் அதைப் பிரதிபலித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, அன்புமணியின் கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, அவரை சமரச நிலைக்கு கொண்டு வர பிரதமரை சந்திக்க ராமதாஸ் நேரம் கேட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் தற்போது தமிழ்நாடு அரசியல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ்-மோடி சந்திப்பு நடைபெறுமானால், பாமக-என்டிஏ உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற முடிவுக்கு அரசியல் விமர்சகர்கள் வந்துள்ளனர்.