திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் தான் லலிதா. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதியாகவுள்ள தன் மகன் வினோத்தை பார்க்க சென்று உள்ளார். அப்போது சிறைச்சாலை விதிமுறையின் அடிப்படையில் தன் மகனுக்கு கொடுக்க லலிதா கொண்டுவந்திருந்த தின்பண்டங்களை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பேரீச்சம் பழங்களில் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து கொண்டுவந்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் லலிதா மீது போதை பொருள் தடுப்பு சட்டம் மற்றும் சிறைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கைதான லலிதாவின் மகன் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் ஜெயிலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பேரிச்சம் பழத்திற்குள் போதை பொருளை மறைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
