பெங்களூருவில் இருந்து பரவி வரும் அதிர்ச்சிகரமான தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உணவு பழக்கத்தை ஒரு குழு இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இவர் சாதாரண உணவு எதையும் உட்கொள்வதில்லை, தினமும் ஏழு முதல் எட்டு லிட்டர் வரை எஞ்சின் ஆயில் மட்டுமே குடிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவரை “ஆயில் குமார்” என்று அழைக்கின்றனர்.

இளைஞர்கள் பகிர்ந்த வீடியோவில், பலர் அவருக்கு உணவு கொடுக்க முயன்றும், அவர் உணவை நிராகரித்து பாட்டிலில் இருந்த எஞ்சின் ஆயிலை குடிப்பது தெளிவாகக் காணப்படுகிறது. தினமும் எஞ்சின் ஆயிலுடன் கூடுதலாக அவர் தேநீரும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆச்சர்யமாக, இத்தனை ஆண்டுகளாக இவ்விதமான வாழ்க்கை முறையை பின்பற்றியும், அவருக்கு பெரிய அளவில் எந்தவித உடல்நலக்குறைவும் ஏற்படவில்லை என்றும், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உருவாகவில்லை என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by AvalakkiPavalakki (@avalakki_pavalakki)

“>

இந்நிலையில், அந்த நபர் தன்னுடைய ஆரோக்கியம் குறித்து, “இது எல்லாம் பகவான் அய்யப்பனின் அருள். இல்லையெனில், நான் எஞ்சின் ஆயிலை குடித்து இவ்வளவு காலம் உயிருடன் இருக்க முடியாது” என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் மருத்துவர்கள், பெட்ரோலிய பொருளான எஞ்சின் ஆயில் மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது; இது குடல்சார் பிரச்சினைகள், நிமோனியா, நுரையீரல் செயலிழப்பு, குமட்டல்,  மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளில் கோளாறு போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.