கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் வசித்து வந்தவர் தான் கார் டிரைவர் வீரசாமி. இந்த ஊரை சேர்ந்த சில பேர் காலையில் சிவன் கோயிலில் அரச மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்து விட்டனர். இதனால் அதிலிருந்து பறந்து வந்து தேனீ கூட்டமானது வீரசாமி உட்பட 10 பேரை கொட்டியது. இதனால் காயமடைந்த 10 பேரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு தங்களது வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் வீராசாமிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில் வீராசாமி உயிரிழந்துவிட்டார்.
இதன் காரணமாக கோபமடைந்த அவரது குடும்பத்தினர் தேன் கூட்டை கலைத்து விட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு மலை தேன் கொட்டியதில் கார் டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
