சினிமாவில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள்தான். ஹீரோக்களும், ஹீரோயின்களும் இந்தப் பயணத்தில் பலவிதமான கருத்துக்களை சந்தித்திருக்கின்றனர்.

அந்த வகையில், முன்னணி நடிகை தீபிகா படுகோன், தனது ஆரம்ப காலத்தில் உடல் அமைப்பு குறித்து (பாடி ஷேமிங்) எதிர்கொண்ட விமர்சனங்களைப் பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

தற்போது அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபிகா, தனது அனுபவத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

தீபிகா, சினிமாவில் காலடி எடுத்து வைத்த புதிதில், தனது தோற்றம் குறித்து பலர் கிண்டலாக பேசியதாக கூறினார். தனது புகைப்படங்களை சில இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு அனுப்பியபோது, “நீ ஆண்போல இருக்கிறாய்” என்று நேரடியாக கூறியதாகவும், அந்த வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் உருக்கமாக தெரிவித்தார்.

“என் முன்னாலேயே இப்படி பேசும்போது, அதை தாங்குவது கடினமாக இருந்தது” என்று தீபிகா கண்ணீருடன் பகிர்ந்தார். இருப்பினும், இந்த விமர்சனங்களை தாண்டி, தனது திறமையால் உலகளவில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தவர் தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.