‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்.17) விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

அங்கிருந்து கேரளா பயணம் மேற்கொண்டு, அடுத்த 6 நாட்கள் படம் சம்பந்தமான வேலைகளில் பிசியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளை சந்தித்தார். இதில், நடிகர் விஜயின் அரசியல் களம் மற்றும் பிரசாரத்தின் போது திரை பிரபலங்களுக்கு கிடைக்கும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், “இதற்குப் பதில் அளிக்க விரும்பவில்லை. கேரளாவிற்கு 6 நாட்களுக்கு ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்காக செல்கிறேன். வேறு எதுவும் இல்லை” என சுருக்கமாகக் கூறினார்.

அரசியல் தொடர்பான கேள்விகளில் தவிர்த்து பேசும் பழக்கத்தையே தொடர்ந்த ரஜினியின் இந்த பதிலில், அரசியல் விவகாரங்களைத் தொடாமல் தன்னை படம் மற்றும் பணிக்கே மையப்படுத்துகிறார் என்பது தெரிய வந்தது. இதனிடையே, விஜயின் ‘மக்கள் சந்திப்பு பிரசாரம்’ குறித்து ரஜினி எந்தவிதக் கருத்தும் கூறாமல் இருந்தது, ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.