மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தற்காலிக அலுவலகத்தை உடனே காலி செய்யுமாறு கட்டட உரிமையாளர் மோண்டு என்பவர் போலீசில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார். டிஎம்சி கட்சியின் சொந்த அலுவலகம் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதால், தற்காலிகமாக இந்த கட்டடத்திற்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே இதற்கான வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த நிலையிலும், கட்சி நிர்வாகிகள் இன்னும் இடத்தை காலி செய்யாமல் இழுத்தடித்து வருவதாகக் கட்டட உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் டிஎம்சி கட்சியின் உட்கட்சி மோதல் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏ ஒருவர், இந்த தற்காலிக ஆபீஸைத் தங்களுடையது எனக் கூறி உரிமை கொண்டாடுவதால் தான், இன்னும் இடத்தை காலி செய்யாமல் நிர்வாகிகள் அடம் பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இச்சம்பவம், மேற்கு வங்க அரசியலில் தற்சமயம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
