சமீபகாலமாக இணையத்தில் கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி இடையேயான சண்டை, நகைச்சுவை சண்டைகள் அடங்கிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரே ஒரு ட்விஸ்டால் நெட்டிசன்களிடையே பேரதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்திய ஒரு வீடியோ வெளியாகி வைரலாக மாறியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Varsha Bhardwaj | Data Scientist (@its.me_varshaaa)

இந்த வீடியோவில், கணவர் படுக்கையறையில் படுத்துக்கொண்டு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார். “வாரம் முழுவதும் அலுவலக வேலைல களைப்பா இருக்குது, வீக்கெண்ட்டு – ல மனைவிக்காக இருக்கணும்… அவ தான் எல்லா வேலையும் பண்ணுறா. நான் அவங்க கூட தான் இருக்குறேன்” என்று செம ஃபீலிங்கா பேசுகிறார். இதை எல்லாம், ரகசியமாக கேட்கும் மனைவியின் முகத்தில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிகிறது. அத்துடன், “நீ என்கிட்ட இருந்தா தான் சந்தோஷம்… ஆனா நீ சந்தோஷமா இருக்கணும்னா நீ போயிட்டு வெளில வா” என அனுமதி கொடுக்கிறார்.

இதையடுத்து படுக்கையறையில் படுத்து கொண்டிருந்த கணவன் வேகமாக எழுந்து வெளியே புறப்பட்டு செல்கிறார். அப்போது தனது மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார். இதனை பார்த்த மனைவி ஆச்சரியத்தில் உறைந்து நிற்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.