கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் ரேணுகா, சுனிதா, திம்மக்கா. நண்பர்களான இவர்கள் 3 பேரும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் ரேணுகா, சுனிதா, திம்மக்கா ஆகிய 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரேணுகா மட்டும் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ரேணுகா வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில்  குடும்பத்தினர் ரேணுகாவிற்கு வேறொரு நபரை திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இன்னும் சில தினங்களில் அந்த நபருடன் ரேணுகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்நிலையில் காதலனை மறக்க முடியாமல் வேதனையில் இருந்த ரேணுகா தற்கொலை செய்தது தெரியவந்தது. அதேபோன்று அவரது நண்பர்களான திம்மக்கா மற்றும் சுனிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே காதலனை மறந்து வேறு நபருடன் வாழ முடியாது என நினைத்து 3 பேரும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது. தற்போது திம்மக்கா மற்றும் சுனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் சில தினங்களில் இருக்கும் நிலையில் காதலனை மறக்க முடியாமல் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.