ஒரு இளைஞரின் உத்வேகம் தரும் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறது. வெறும் 21 வயதில், கடின உழைப்பால் தனது கனவை நனவாக்கிய இந்த இளைஞர், இன்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
இந்த கதை ரெடிட் பக்கத்தில் Zealousideal-Rise731 என்ற பயனரால் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர், தனது அயராத முயற்சியால் வாழ்க்கையை மாற்றிய கதை, ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துகிறது. “இந்த இளைஞர் தனது கனவை நனவாக்கி, பெற்றோருக்கு பெருமை சேர்த்துவிட்டார்!” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
21M got a Software engineer Job in MNC 1lakh per month
byu/Zealousideal-Rise731 inIndian_flex
இந்த இளைஞரின் குடும்பம் மாதம் 15,000 ரூபாய் மட்டுமே வருமானமாகப் பெற்று, ஒரு சிறிய வாடகை அறையில் வாழ்ந்தது. ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இவரது பெற்றோர், தங்கள் தேவைகளை தியாகம் செய்து, மகனின் படிப்புக்கு முன்னுரிமை அளித்தனர்.
கொரோனா காலத்தில், ஆன்லைன் வகுப்புகளுக்கு 9,000 ரூபாய்க்கு கடனில் ஸ்மார்ட்போன் வாங்கியது இவரது குடும்பம். இவர், கோச்சிங் செல்ல முடியாத நிலையில், யூடியூபை நம்பி, JEE மற்றும் MHT-CET தேர்வுகளுக்கு தயாரானார். CET-யில் 2537-வது ரேங்க் பெற்று, நல்ல கல்லூரியில் இடம் பிடித்தார்.
கல்லூரியில் மேலும் கடினமாக உழைத்து, தன்னை மெருகேற்றி, இறுதியில் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை பெற்றார். இவரது கதை, விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
