இணையத்தில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோவில், காரில் வந்த ஒருவரை கொள்ளையடிக்க முயன்ற இரு திருடர்கள், எதிர்பாராத எதிர்வினையை சந்தித்து தவித்த காட்சி பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்தக் குற்ற சம்பவ வீடியோ, சமூக வலைதளமான X-ல் @DumbDeadShit என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. 40 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ, வெளியான சில மணிநேரங்களில் 6.83 லட்சம் பார்வைகள் மற்றும் 4,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு நபர் தனது காரில் இருந்து வெளியேறுவதை  காணலாம். அதே நேரத்தில், ஒரு பைக்கில் வந்த இரு திருடர்கள் அருகில் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து, கார் ஓட்டுநரை சுடுகிறார்.

 

இதனைத் தொடர்ந்து, எதிர்பாராத வகையில் கார் ஓட்டுநரும் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, குற்றவாளிகளின் மீது நேரடியாக சுட தொடங்குகிறார். அச்சமயம், இருவரும் பரபரப்பாக இடத்தைவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கிப் சண்டையில், திருடர்கள் திட்டமிட்ட திருட்டில் தோல்வியடைந்து ஓடிவிட்டனர், ஆனால் கார் ஓட்டுநர் தனது காலில் காயம் அடைந்தார் என்பதும் அந்த வீடியோவின் இறுதியில் தெரிகிறது.